Tuesday, April 20, 2010

தரிசனம் 2

சாதகன்: உனது ஆர்வமும், தீவிரமும் உனது தேவைக்கு ஏற்ப்பவே உறுதி செய்யப்படுகிறது.என்று கூறினீர்கள் எனது தேவை என்பது என்ன?
குரு: உனது அறிவு வேட்கைக்காக என்னை அறிய விரும்புகிறாயா? அல்லது என்னோடு கலப்பது தவிர உனக்கு வேறு வழியில்லையா?
சாதகன்: எனது அறிவு வேட்கைக்காகவே உங்களோடு இணைய விரும்புகிறேன்.
குரு: அதற்க்கு சாத்தியமே இல்லை.நீ என்னோடு இணைவது தவிர வேறு கதி இல்லை என்பதை நீ உன் வாழ்க்கையில் உணர்ந்திருந்தால் ஒழிய, நீ என்னோடு கலப்பதற்கு வேறு மார்க்கம் கிடையாது. முதலில் உன்னை நீ யார்? என்பதை அறிய வேண்டும். அறிந்த பின்னே மற்றதுக்கு சாத்தியம்.
சாதகன்: நான் யார்? என்பதை எனக்கு புரியும்படி விளக்குங்கள்.

1 comment:

  1. இந்த தேகத்தில் ‘நான்’ என்று கிளம்புவது எதுவோ அதுவே மனம். நமக்குத் தோன்றும் எல்லா நினைவுகளுக்கும் முதல் நினைவு ‘நான்’ என்னும் நினைவே. மற்றெல்லா நினைவுகளிலும் இந்த ‘நான்’ என்னும் நினைவு கலந்திருக்கிறது. நினைவே மனம். நினைவுகளைத் தவிர மனம் என்றொரு பொருள் தனியாக இல்லை. எல்லா நினைவுகளையும் நீக்கிப் பார்க்கும்போது மனம் என்று ஒன்றும் இருக்கக் காணோம்! இந்த மனம் நான் யார்? என்ற விசாதத்தினால் மட்டும்தான் அழிக்கப்படக் கூடியது. விசாரத்தால் சகல நினைவுகளும் ஒழியவே மனம் அழியும். ‘நான்’ என்னும் நினைவைத் தொடர்ந்து சென்றால், அது மற்ற நினைவுகள் எல்லாவற்றையும் அழித்து முடிவில் தானும் அழியும்; பிணம் சுடு தடிபோல! பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் “அவை யாருக்கு உண்டாயின?” என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழுந்தாலும் என்ன? ஜாக்கிரதையாக ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே, ‘இது யாருக்கு உண்டாயிற்று?’ என்று விசாரித்தால் ‘எனக்கு’ என்று தோன்றும். உடனே நான் யார்? என்று மடக்கினால் மனம் தன் பிறப்பிடத்திற்கு திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இவ்வாற மறுபடியும் ‘நான் யார்?’ என்ற விசாரத்திற்கே திரும்பி ஆழ்ந்து முழுகவேண்டும்”
    இந்த “நாய் யார்?” என்னும் ஆன்ம விசாரத்தை அனைவரும் மேற்கொள்ளலாமெனினும், கூர்மதியும், கலக்கமற்ற சிந்தையும், நிச்சய புத்தியும், தேக ஆரோக்கியமும் திடமும் உடையவர்களுக்கே இது சுலப சாத்தியமாகும். இது மேலெழுந்த வாரியாக ‘நான் யார்’, ‘நான் யார்?’ என்று வாயால் கேட்டுக் கொண்டிருக்கத் தகுந்ததோர் வேலையல்ல. மிக ஆழ்ந்த கவனம் கொண்டு செய்யப்படும் இது, “நாள்தோறும் கால்மணி நேரம் பழகி வரலாம். விழியைத் திறந்து கொண்டே மனத்தை (இவ்வுலகை) பார்ப்பவனைப் பார்ப்பதிலேயே உண் முகப்படுத்தி ஊன்ற வேண்டும். பார்க்கும் அது தன்னுள்ளேயே உள்ளது. அது எளிதாகப் பற்றக் கூடிய குறித்த உருவமல்ல. சாதாரண மக்களுக்கு அதைக்காணப் பல்லாண்டு செல்லுமெனினும், அதன்மேல் ஏகாக்கிரப்பட்டால் நாலைந்து மாதங்களில் மனச் சாந்தமும், துயர்களை மதியாத் தன்மையும், தன்னையறியாது ஒரு சக்தியும் பிறக்கும். ஆதலின் இன்று முதல் இந்த தியானத்தில் கருத்தூன்றுக” என்றருளிச் செய்தனர். தியானத்தில் ஏற்படும் சிரத்தையின் அளவைப் பொறுத்ததே தியான பலன் என்பது நாம் விஷயமேயாதலால் பொழுதுபோக்காக அல்லாமல் பூரண ஊக்கத்துடன் ஆன்மத்தியானம் செய்யவேண்டும்.

    ReplyDelete